சீமானின் எழுச்சி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இரண்டு கட்சிகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. ஒன்று நாம் தமிழர், மற்றொன்று மக்கள் நீதி மய்யம். இதில் நாம் தமிழர் பெற்ற வாக்கு சதவிகிதம் 3.87. இது ஒரு நல்ல வாக்கு சதவிகிதம். இது சீமானின் கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அவர் தம்பிகளும் கடுமையாக உழைத்தனர். சீமானும் அவர் கூறியபடி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார். பொது தொகுதிகளில் SC வேட்பாளர்களை நிறுத்தினார். இவையுடன் சேர்த்து ஓட்டிற்கு பணம் தரவில்லை.

இனி சீமான் செய்யவேண்டியது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 234 தொகுதிகளிளும் வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களை களத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் களத்திற்கு சென்று மக்களோடு மக்களாக இருந்து களப்பணி செய்ய வேண்டும். அவர்களால் முடிந்த அளவு மக்கள் பணி செய்யவேண்டும். சீமானும் ஒத்த கருத்துள்ள தலைவர்களை அரவணைத்து அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Exit poll results – தமிழக ஊடகவியலாளர்கள் கதறல்

நேற்று முன்தினம் அனைத்து வடநாட்டு ஊடகங்கள்ளும் BJP 300 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கும் என கூறியுள்ளது. நம் தமிழக ஊடகவியலாளர்கள் அதை ஜீரணிக்க முடியவில்லை. நானும் அதை ஏற்கவில்லை. NDAவிற்கு full majority கிடைக்கும் ஆனால் அது 300ஐ தாண்டாது என்பது என் கணிப்பு.

தமிழகத்தில், கேரளாவில், பஞ்சாபில் BJP தோற்கும் என்பதை ஏற்றுக்கொள்பவர்கள், மற்ற மாநில கணிப்புகளை தவறு என்கிறார்கள். இங்கு தமிழகத்தில் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து இழித்தும், பழித்தும் வசைபாடுபவர்களுகு, இந்து மதத்தை உயர்த்தி பிடிக்கும் BJPயை கண்டால், பார்த்தால் பிடிக்காது. அதவும் திமுகவிற்கு ஆதரவாக எழுதி பிழைப்பு நடத்தும் இவர்கள் இப்படித்தான் கதறுவார்கள். எப்படி பூனை கண்ணை முடிக்கொண்டால் பூலோகம் இருளாதோ அதை போலத்தான் தமிழகத்தில் BJP கூட்டணி தோற்றாலும் அகில இந்திய அளவில் வெற்றி பெறும்.

Exit poll results

அனைத்து தேர்தல் பிந்தய கருத்துகணிப்புகளும் BJPயே வெல்லும் என கூறகிறது. தமிழகத்தில் DMK அதிக தொகுதிகளில் வெல்லும் என கணிப்பு. மே 23 பெட்டியை திறக்கும் போது பல அதிர்ச்சிகளும், அதிசயங்களும் காத்திருக்கிறது.

சங்கர மடத்தில் பிரச்சினை – ஜூவி கட்டுரை

சங்கர மடத்தில் பிரச்சினையென ஜூவியில் கட்டுரை. ஆடு நனைகிறது என ஒநாய் அழுகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்களை ஆதரிக்கும் ஜுவி பத்திரிகை கவலைப்படுகிறது.

கமல் பேச்சு – ஜீயர் பதில்

கமலின் திமிரான பேச்சுக்கு ஜியரின் பதில் தவறு, ஏற்புடையதல்ல. தயவுசெய்து ப்ராமண சந்யாசிகள் மடங்களை விட்டு வெளியே வந்து சாதி, மதம் பார்க்காமல் சாதாரண மக்களோடு மக்களாக அவர்களுடன் பழகி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உங்களாள்ஆன உதவிகளை செய்யுங்கள்.

கமல் பேச்சு – மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு.

கமல் பேச்சுக்கு VCK, communist, periodista groups அனைவரும் ஆதரிக்கின்றனர். DMK எதுவும் பேசவில்லை. தற்போது DMK கூட்டணியில் உள்ள கட்சிகள் தற்போதே அடுத்த தேர்தலுக்கு கமலிடம் துண்டு போட்டுள்ளார்கள்.

தமிழிசை பேச்சு – திமுகவின் பதற்றம்

இன்று தமிழிசையின் பேட்டி திமுகவை கலங்கடித்துள்ளது. நேற்று KCR சந்திப்பு, இன்று தமிழிசை பேட்டி பல அனுமானங்களை எற்படுத்தியுள்ளது. விடை தேர்தல் முடிவு சொல்லும்.

கமல் நாக்கு – அமைச்சர் பேச்சு

கமலின் அபத்த பேச்சுக்கு அமைச்சரின் பதில் தவறு. அமைச்சரை கண்டிப்பவர்கள் ஏன் கமலை கண்டிக்கவில்லை. இது தான் போலி மதச்சார்பின்மை. தமிழ் நாட்டில் BJPஇன் sleeper cells இவர்கள் தான். இந்து மதத்தை போகிறபோக்கில் கிண்டல் செய்வது, நக்கல் அடிப்பது இனி எடுபடாது. அதற்கு ஆதாரம் கமல் தேர்தல் பிரசாரத்தை தவிர்த்து விட்டு முடங்கி இருக்கிறார்.

கமல்

இந்தியாவின் முதல் திவிரவாதி ஒரு இந்து – கமல்.

கமல் என்ன தான் இந்துக்களை இழிவுபடுத்தினாலும், அவரை பார்பனன் என்றுதான் செல்லுவார்கள்.

இலங்கையில் குணடு வைத்தவர்கள் திவிரவாதிகள், இஸ்லாமியர்கள் இல்லையேனில் கோட்சேயும் திவிரவாதியே, இந்து அல்ல