நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இரண்டு கட்சிகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. ஒன்று நாம் தமிழர், மற்றொன்று மக்கள் நீதி மய்யம். இதில் நாம் தமிழர் பெற்ற வாக்கு சதவிகிதம் 3.87. இது ஒரு நல்ல வாக்கு சதவிகிதம். இது சீமானின் கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அவர் தம்பிகளும் கடுமையாக உழைத்தனர். சீமானும் அவர் கூறியபடி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார். பொது தொகுதிகளில் SC வேட்பாளர்களை நிறுத்தினார். இவையுடன் சேர்த்து ஓட்டிற்கு பணம் தரவில்லை.
இனி சீமான் செய்யவேண்டியது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 234 தொகுதிகளிளும் வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களை களத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் களத்திற்கு சென்று மக்களோடு மக்களாக இருந்து களப்பணி செய்ய வேண்டும். அவர்களால் முடிந்த அளவு மக்கள் பணி செய்யவேண்டும். சீமானும் ஒத்த கருத்துள்ள தலைவர்களை அரவணைத்து அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.