கடலூர் கேவலம்

கடலூரில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோவம் அடைந்த பெண்ணின் தந்தை அந்த பையனின் தாயை மின்சார கம்பத்தில் கட்டிவைத்து அடிந்துள்ளார். இது எவ்வளவு காட்டுமிராண்டித்தனம். அந்த பெண்ணின் தந்தையின் கோபம் நியாயமானது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு அந்த பையனின் தாய் என்ன செய்வார். அந்த தாயை கம்பத்தில் கட்டிவைத்து அடத்தது எந்த விதத்தில் நியாயம். செய்தியறிந்து போலிசார் வந்து அந்த தாயை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சையளிக்க எற்பாடு செய்துள்ளனர். இதற்க்கிடையில் இரு குடும்பத்தினரும் சமாதானம் அடைந்துள்ளனர். விசயம் தெரிந்து காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் முக்கிய விசயம் இந்த ஜோடியில் பையனும் பெண்ணும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இரு உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள். இதை பற்றி ஏன் திருமா, evidence கதிர், சுப.வீ., மதிமாறன் பேசவில்லை. இதையே இடைநிலை சாதியினர் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா. எவ்வளவு கூப்பாடு பேட்டிருப்பாரகள். இதுதான் இவர்களின் உண்மை முகம்.

Leave a comment