கர்நாடக அரசியல் குழப்பம்

கர்நாடகத்தில் நாளை குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப்போகிறது. அதில் அரசு ஜெயிப்பது கடினம். இந்த அரசுக்கு எற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு BJP காரணம் அல்ல. அவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறார்கள். இதற்கு முழு காரணம் Congress தான். தங்களிடம் அதிக MLAக்கள் இருந்தும் முதல்வராக முடியவில்லயே என்கிற ஆத்தாமையும், சித்தராமையாவின் பதவி வெறியும் தான் காரணம். குமாரசாமி இரண்டு முறை பொது மேடைகளில் Congress MLAக்கள் தன்னை பாடாய்படுத்துவதாக கூறி கதறி அழுதார். Congress-JDS கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்பொழுது Congress தலையில்லா முண்டம் போல் தலைவரில்லாமல் தந்தளிக்கிறது.

வழக்கம் போல தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் BJPமீது பழி போடுகிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் என்ன நடந்தாலும் BJPயே காரணம். தமிழக ஊடகங்கள் 90% திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பெரியாரிஸ்டுக்களால் நடத்தப்படுகிறது. எனவே இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

Leave a comment