தமிழகத்தில் முதல்முறையாக மாட்டுக்கறி சம்பந்தமாக தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உணவு என்பது தனி மனித வருப்பம் மற்றும் உரிமையாகும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு கண்டிப்பாக சட்டத்தின் முலமாக தண்டனை பெற்றுத்தரவேண்டும். இந்து மதத்தில் பசு மாட்டை மகாலட்சுமியுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் பசு மாட்டை சாப்பிட்டால் அடிக்கவோ, கொல்லவோ சொல்லவில்லை. இதைப்போல தவறான செயல்கள் இந்து மதத்தை பற்றிய தவறான புரிதலை எற்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான செயல்கள் முழுக்க, முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. தாக்குதல் நடத்தியவர்களுக்க துரிதமாக தண்டனை பெற்று தரவேண்டும், அதை ஊடகங்களிளும் வெளியிடவேண்டும்.