தமிழகத்தில் பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கிடு வேண்டுமா அல்லது வேண்டாமா என விவாதம் நடக்கிறது. தமிழகத்தில் இடஒதுக்கிடு பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதை தாண்டித்தான் பிராமணர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேரியுள்ளனர். அதனால் பிராமணர்களுக்கு இடஒதுக்கிடு தேவையில்லை. இடஒதுக்கிடு அவர்களின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும். இது என்னுடைய கருத்து. இரண்டாவதாக தமிழகத்தில் பிராமணர்கள் அதிகபட்சமாக 3-4% உள்ளனர். மக்கள் தொகையில் மிகவும் குறைந்த சதவிகிதத்தில் உள்ள சமுகம் அதிக சதவிகித இடஒதுக்கிடு பெறுவது தவறு. அதைப்போல இத்தனை நாட்களாக இடஒதுக்கிட்டை தவறு என கூறிவிட்டு தற்போது தங்களுக்கு என வந்தால் சரி என்று ஏற்றுக்கொள்வது தவறு. இதை நான் ஒரு பிராமணனாக எழுதுகிறேன்.