நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் UPயில் BSP-SP கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் மோடி அலையில் BJPயும் அதன் கூட்டணியும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. BSP-SP கூட்டணி 10-5 என 15 இடங்களில் வெற்றி பெற்றது. இவர்களின் இந்த எதிர்பாராத தோல்வியால் இன்று இந்த கூட்டணி உடைந்தது. இந்த கூட்டணியால் பலன் அடைந்தது மாயாவதி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாத BSP இந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது SP கூட்டணியால் மட்டுமே சாத்தியமானது. அதை வசதியாக மறந்துவிட்டு SP மீது பழி போட்டுவிட்டு கூட்டணியை முறித்துக்கொண்டு விட்டார். தவறான முடிவை எடுத்த SP தலைவர் அகிலேஷ் யாதவ் மரணித்துக்கொண்டிருந்த BSPக்கு உயிர் கொடுத்துள்ளார். இதற்கு அவர் வரும் காலங்களில் வருந்துவார்.