BJP வெற்றி – Front line கதறல்

நேற்று Hindu பத்திரிகை குழுமத்தின் Front line magazine படித்தேன். அதில் BJPயின் தேர்தல் வெற்றி பற்றி articles எழுதி இருந்தனர். அதில் முழுக்க, முழுக்க BJPயின் வெற்றி என்பது மதவாதத்தால் கிடைத்தது என எழுதி இருந்தனர். இவர்கள் மோடி எதிர்ப்பை த்தாண்டி எதையும் யோசிப்பதில்லை. மோடியின் வெற்றிக்கு மதவாதம் மட்டும் காரணம் இல்லை. அதைத்தாண்டி மோடி அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்று அடைந்துள்ளதும் ஒரு காரணம். மோடி 13 வருடங்கள் முதல்வராக இருந்தும், 5 வருடங்கள் பிரதமராக இருந்தும் அவர் மீதும் அவர் அமைச்சரவை மீதும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. Rafael deal பற்றி எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டை மக்கள் நம்பவில்லை. அதனால் தான் அவரது பணமதிப்பிழப்பு மற்றும் GSTயால் பாதிக்கப்பட்ட போதும் மக்கள் அவரை நம்பி வாக்களித்தனர். அதைப்போல எதிர்கட்சியினரின் ஒற்றுமையின்மயும் மிகமிக முக்கிய காரணம். இவை தவிர அவர்கள் தங்கள் கட்சியை பலப்படுத்தினர். அதன் பயன் ஒடிசாவில் 8 சீட், மேற்கு வங்கத்தில் 18 சீட், தெலுங்கானாவில் 4 சீட்.

Leave a comment