நேற்று முன்தினம் அனைத்து வடநாட்டு ஊடகங்கள்ளும் BJP 300 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கும் என கூறியுள்ளது. நம் தமிழக ஊடகவியலாளர்கள் அதை ஜீரணிக்க முடியவில்லை. நானும் அதை ஏற்கவில்லை. NDAவிற்கு full majority கிடைக்கும் ஆனால் அது 300ஐ தாண்டாது என்பது என் கணிப்பு.
தமிழகத்தில், கேரளாவில், பஞ்சாபில் BJP தோற்கும் என்பதை ஏற்றுக்கொள்பவர்கள், மற்ற மாநில கணிப்புகளை தவறு என்கிறார்கள். இங்கு தமிழகத்தில் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து இழித்தும், பழித்தும் வசைபாடுபவர்களுகு, இந்து மதத்தை உயர்த்தி பிடிக்கும் BJPயை கண்டால், பார்த்தால் பிடிக்காது. அதவும் திமுகவிற்கு ஆதரவாக எழுதி பிழைப்பு நடத்தும் இவர்கள் இப்படித்தான் கதறுவார்கள். எப்படி பூனை கண்ணை முடிக்கொண்டால் பூலோகம் இருளாதோ அதை போலத்தான் தமிழகத்தில் BJP கூட்டணி தோற்றாலும் அகில இந்திய அளவில் வெற்றி பெறும்.