கடலூர் கேவலம்

கடலூரில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோவம் அடைந்த பெண்ணின் தந்தை அந்த பையனின் தாயை மின்சார கம்பத்தில் கட்டிவைத்து அடிந்துள்ளார். இது எவ்வளவு காட்டுமிராண்டித்தனம். அந்த பெண்ணின் தந்தையின் கோபம் நியாயமானது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு அந்த பையனின் தாய் என்ன செய்வார். அந்த தாயை கம்பத்தில் கட்டிவைத்து அடத்தது எந்த விதத்தில் நியாயம். செய்தியறிந்து போலிசார் வந்து அந்த தாயை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சையளிக்க எற்பாடு செய்துள்ளனர். இதற்க்கிடையில் இரு குடும்பத்தினரும் சமாதானம் அடைந்துள்ளனர். விசயம் தெரிந்து காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் முக்கிய விசயம் இந்த ஜோடியில் பையனும் பெண்ணும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இரு உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள். இதை பற்றி ஏன் திருமா, evidence கதிர், சுப.வீ., மதிமாறன் பேசவில்லை. இதையே இடைநிலை சாதியினர் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா. எவ்வளவு கூப்பாடு பேட்டிருப்பாரகள். இதுதான் இவர்களின் உண்மை முகம்.

கர்நாடக அரசியல் குழப்பம்

கர்நாடகத்தில் நாளை குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப்போகிறது. அதில் அரசு ஜெயிப்பது கடினம். இந்த அரசுக்கு எற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு BJP காரணம் அல்ல. அவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறார்கள். இதற்கு முழு காரணம் Congress தான். தங்களிடம் அதிக MLAக்கள் இருந்தும் முதல்வராக முடியவில்லயே என்கிற ஆத்தாமையும், சித்தராமையாவின் பதவி வெறியும் தான் காரணம். குமாரசாமி இரண்டு முறை பொது மேடைகளில் Congress MLAக்கள் தன்னை பாடாய்படுத்துவதாக கூறி கதறி அழுதார். Congress-JDS கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்பொழுது Congress தலையில்லா முண்டம் போல் தலைவரில்லாமல் தந்தளிக்கிறது.

வழக்கம் போல தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் BJPமீது பழி போடுகிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் என்ன நடந்தாலும் BJPயே காரணம். தமிழக ஊடகங்கள் 90% திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பெரியாரிஸ்டுக்களால் நடத்தப்படுகிறது. எனவே இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

மாட்டுக்கறி Facebook photo – தாக்குதல்.

தமிழகத்தில் முதல்முறையாக மாட்டுக்கறி சம்பந்தமாக தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உணவு என்பது தனி மனித வருப்பம் மற்றும் உரிமையாகும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு கண்டிப்பாக சட்டத்தின் முலமாக தண்டனை பெற்றுத்தரவேண்டும். இந்து மதத்தில் பசு மாட்டை மகாலட்சுமியுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் பசு மாட்டை சாப்பிட்டால் அடிக்கவோ, கொல்லவோ சொல்லவில்லை. இதைப்போல தவறான செயல்கள் இந்து மதத்தை பற்றிய தவறான புரிதலை எற்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான செயல்கள் முழுக்க, முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. தாக்குதல் நடத்தியவர்களுக்க துரிதமாக தண்டனை பெற்று தரவேண்டும், அதை ஊடகங்களிளும் வெளியிடவேண்டும்.

பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கிடு

தமிழகத்தில் பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கிடு வேண்டுமா அல்லது வேண்டாமா என விவாதம் நடக்கிறது. தமிழகத்தில் இடஒதுக்கிடு பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதை தாண்டித்தான் பிராமணர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேரியுள்ளனர். அதனால் பிராமணர்களுக்கு இடஒதுக்கிடு தேவையில்லை. இடஒதுக்கிடு அவர்களின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும். இது என்னுடைய கருத்து. இரண்டாவதாக தமிழகத்தில் பிராமணர்கள் அதிகபட்சமாக 3-4% உள்ளனர். மக்கள் தொகையில் மிகவும் குறைந்த சதவிகிதத்தில் உள்ள சமுகம் அதிக சதவிகித இடஒதுக்கிடு பெறுவது தவறு. அதைப்போல இத்தனை நாட்களாக இடஒதுக்கிட்டை தவறு என கூறிவிட்டு தற்போது தங்களுக்கு என வந்தால் சரி என்று ஏற்றுக்கொள்வது தவறு. இதை நான் ஒரு பிராமணனாக எழுதுகிறேன்.

BJP செய்யும் தவறு

கர்நாடக அரசியலில் தற்போது நடக்கும் நாடகம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாக உள்ளது. Congress MLAக்கள் 10 பேரும், JDS MLAக்கள் 3 பேரும் ராஜினாமா செய்துள்ளார்கள். ராஜினாமா செய்த அனைவரும் தற்போது மும்பையில் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு BJP தலைவர்கள் வந்து போயுள்ளனர். இதில் BJPயின் கை இருந்தால் அது மிகவும் தவறானது. Congress-JDS கூட்டணி தானாகவே உடைந்துவிடும். தேவை இல்லாமல் BJP செய்யும் தவறால் மக்களிடம் அந்த கட்சிக்குதான் கெட்ட பெயர் எற்படுத்தும். ஆனால் தற்போது JDS தலைவர் தேவகௌடாவோ முன்னாள் முதல்வர் சித்தராமையாவை குறை கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம். நடப்பவை நல்லதற்கே.

No for TV Debate

தமிழ் நாடு BJP சார்பில் ஊடக விவாதங்கள்ளில் யாரும் பங்கெடுக்கப்போவதில்லை அறிவிப்பு வந்துள்ளது. இது ஒரு நல்ல முடிவு, சரியான முடிவு.

BSP – SP கூட்டணி உடைந்து

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் UPயில் BSP-SP கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் மோடி அலையில் BJPயும் அதன் கூட்டணியும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. BSP-SP கூட்டணி 10-5 என 15 இடங்களில் வெற்றி பெற்றது. இவர்களின் இந்த எதிர்பாராத தோல்வியால் இன்று இந்த கூட்டணி உடைந்தது. இந்த கூட்டணியால் பலன் அடைந்தது மாயாவதி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாத BSP இந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது SP கூட்டணியால் மட்டுமே சாத்தியமானது. அதை வசதியாக மறந்துவிட்டு SP மீது பழி போட்டுவிட்டு கூட்டணியை முறித்துக்கொண்டு விட்டார். தவறான முடிவை எடுத்த SP தலைவர் அகிலேஷ் யாதவ் மரணித்துக்கொண்டிருந்த BSPக்கு உயிர் கொடுத்துள்ளார். இதற்கு அவர் வரும் காலங்களில் வருந்துவார்.

ஜாதிக்கொரு கோயில்

நேற்று முன்தினம் RSS meeting ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய ஒருவர் RSS சார்பில் மதமாற்றம் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தார்களாம், குறிப்பாக கிராம கோயில்களில் SC/ST பிரிவினர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா என விசாரித்துள்ளார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த பதில் அவர்களை ஆச்சரியப்படுத்தியதாம். அது கிராமங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில 90% கிராமங்களில் கோயில்களில் தீண்டாமை இல்லையாம். இதை RSS நம்பவில்லை. அவர்கள் தனியாக ஒரு team அனுப்பி விசாரித்தார்கள். அவர்களுக்கு கிடைத்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. அதில் ஊரில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் தனித்தனியாக கோயில் உள்ளதாம். அதனால் யாரும் யாரையும் கோயிலுக்குள் வர வேண்டாம் என கூறுவதில்லை. இதுவா தீண்டாமை ஒழிப்பு. இதற்கு நாம் வெட்கப்படவேண்டும். தொடரும்…..

BJP வெற்றி – Front line கதறல்

நேற்று Hindu பத்திரிகை குழுமத்தின் Front line magazine படித்தேன். அதில் BJPயின் தேர்தல் வெற்றி பற்றி articles எழுதி இருந்தனர். அதில் முழுக்க, முழுக்க BJPயின் வெற்றி என்பது மதவாதத்தால் கிடைத்தது என எழுதி இருந்தனர். இவர்கள் மோடி எதிர்ப்பை த்தாண்டி எதையும் யோசிப்பதில்லை. மோடியின் வெற்றிக்கு மதவாதம் மட்டும் காரணம் இல்லை. அதைத்தாண்டி மோடி அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்று அடைந்துள்ளதும் ஒரு காரணம். மோடி 13 வருடங்கள் முதல்வராக இருந்தும், 5 வருடங்கள் பிரதமராக இருந்தும் அவர் மீதும் அவர் அமைச்சரவை மீதும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. Rafael deal பற்றி எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டை மக்கள் நம்பவில்லை. அதனால் தான் அவரது பணமதிப்பிழப்பு மற்றும் GSTயால் பாதிக்கப்பட்ட போதும் மக்கள் அவரை நம்பி வாக்களித்தனர். அதைப்போல எதிர்கட்சியினரின் ஒற்றுமையின்மயும் மிகமிக முக்கிய காரணம். இவை தவிர அவர்கள் தங்கள் கட்சியை பலப்படுத்தினர். அதன் பயன் ஒடிசாவில் 8 சீட், மேற்கு வங்கத்தில் 18 சீட், தெலுங்கானாவில் 4 சீட்.

போராளிஸ் Start music

தமிழக எம். பி.க்கள் யாரும் தற்போது அமைச்சரவையில் அமைச்சராக இல்லை. அதிமுகவிற்கு எம். பிக்கள் இருந்தும் யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை. மோடியை எதிர்க்க அறிய வாய்ப்பு. அமைச்சரவையில் உள்ள ஜெய்சங்கரும் பார்பனர் போல தெரிகிறார். அவர் பார்பனரானால் போராளிஸ் double treatதான். So start the music.